/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோவில் உண்டியலில்திருடிய டிரைவர் கைது
/
கோவில் உண்டியலில்திருடிய டிரைவர் கைது
ADDED : பிப் 18, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில் உண்டியலில்திருடிய டிரைவர் கைது
ஈரோடு:ஈரோடு, பெரிய சேமூர், கல்லாங்கரடு ராம் நகரை சேர்ந்தவர் விஜயகுமார், 40; அதே பகுதியில் உள்ள நாகம்மா கோவில் தர்மகர்த்தா. கோவில் வெளியே சிறு உண்டியல் வைத்திருந்தார். கடந்த, 13ம் தேதி இரவு அடையாளம் தெரியாத நபர் உண்டியலை உடைத்து, பணத்தை திருடி சென்றதாக, வீரப்பன்சத்திரம் போலீசில் புகாரளித்தார்.
அப்பகுதி கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் அதே பகுதியை சேர்ந்த உத்தமன் மகன் அருள்ராஜ், 33, திருடியது தெரிய வந்தது. டிரைவராக பணியாற்றும் அருள்ராஜூவை போலீசார் கைது செய்தனர்.

