/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாரம் சரிந்து விழுந்துஏழு பேர் படுகாயம்
/
சாரம் சரிந்து விழுந்துஏழு பேர் படுகாயம்
ADDED : பிப் 27, 2025 02:14 AM
சாரம் சரிந்து விழுந்துஏழு பேர் படுகாயம்
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம், எஸ்.பி.எஸ்.,கார்னர் எதிரில் சர்ச் பகுதியில் ஆர்ச் கட்டும் பணியில் தொழிலாளர்கள் நேற்று மதியம் ஈடுபட்டிருந்தனர். நுழைவு வாயில் கட்ட, சாரம் கட்டி அதன் மீது தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, சாரம் சரிந்து விழுந்தது. இதில் செண்பகபுதுாரை சேர்ந்த ரங்கசாமி, 56, கூத்தனுார் ராமச்சந்திரன், 30, அண்ணா நகர் குஞ்சான், 50, கண்ணன், 25, ரங்கசமுத்திரம் ரஞ்சித், 19, வடக்கு பேட்டை மாதவி, 60, பேபி, 45, ஆகிய ஏழு பேரும் விபத்தில் படுகாயமடைந்தனர். அனைவரும் மீட்கப்பட்டு, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை
யில் அனுமதிக்கப்பட்டனர். சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.