/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நாளை பொது தேர்வுமையங்களில் ஏற்பாடு
/
நாளை பொது தேர்வுமையங்களில் ஏற்பாடு
ADDED : மார் 02, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாளை பொது தேர்வுமையங்களில் ஏற்பாடு
ஈரோடு:தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்கி, 23ம் தேதி நிறைவு பெறுகிறது. பிளஸ் 1 தேர்வு, 5ல் துவங்கி 25ல் நிறைவு பெறுகிறது. பிளஸ் ௨ தேர்வை, ஈரோடு மாவட்டத்தில், 23,071 பேர் எழுதுகின்றனர். இதற்காக, 108 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு மையங்களில் கழிவறை சுத்தம் செய்தல், பள்ளி வளாக துாய்மை பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு தேர்வு அறையிலும், 20 பேர் தேர்வெழுத வசதி செய்யப்பட்டுள்ளது. மேஜை, கரும்பலகைகளில் தேர்வெண் எழுதும் பணிகளில் ஆசிரியை, ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.