/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பங்குனி உத்திர தேர்திருவிழா முகூர்த்தக்கால்
/
பங்குனி உத்திர தேர்திருவிழா முகூர்த்தக்கால்
ADDED : மார் 11, 2025 06:48 AM
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில் நடப்பாண்டு பங்குனி உத்திர தேர் விழா அடுத்த மாதம், 9ம் தேதி தொடங்கி, 11ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதற்கான தேர் முகூர்த்த விழா நேற்று அதிகாலை கைலசாநாதர் கோவிலில் நடந்தது.
சென்னிமலை முருகன் கோவில் தலைமை அர்ச்சகர் ராமநாத சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. அதை தொடர்ந்து முருகப்பெரு மான் வேலுக்கு சிறப்பு பூஜை, கைலாசநாதர், அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பங்குனி உத்திர திருத்தேருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
பிறகு விழாவை மக்க ளுக்கு அறிவிக்கும் விதமாக, தேரோடும் சென்னிமலை நான்கு ராஜவீதிகளில் முருகப் பெருமான் வேலை மேள - தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதன் பின் தேரோட்டத்தில் ஈடுபடும் பணியாளர், வாத்திய குழுவினர், அர்ச்சகர்கள், ஒதுவார் மூர்த்தி மற்றும் கோவில் பணியாளர்களுக்கு வழக்கப்படி தேங்காய், பழம், அச்சு வெல்லம், விரலி மஞ்சளை பிரசாதமாக தலைமை குருக்கள் வழங்கினார்.