/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வி.இ.டி., கலை கல்லுாரியில்சர்வதேச மகளிர் தின விழா
/
வி.இ.டி., கலை கல்லுாரியில்சர்வதேச மகளிர் தின விழா
ADDED : மார் 16, 2025 01:26 AM
வி.இ.டி., கலை கல்லுாரியில்சர்வதேச மகளிர் தின விழா
ஈரோடு,:ஈரோடு திண்டல் வி.இ.டி., கலை அறிவியல் கல்லுாரியில், சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக பிரபல நடிகையும், நாம் அறக்கட்டளை நிறுவனருமான சுஹாசினி மணிரத்னம் கலந்து கொண்டார். கல்லுாரி நிர்வாக அலுவலர் லோகேஷ்குமார் வரவேற்றார். வேளாளர் கல்வி அறக்கட்டளை செயலாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார்.
வேளாளர் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகளான பாலசுப்பிரமணியன், யுவராஜா, வி.இ.டி., ஐ.ஏ.எஸ்., கல்லுாரி முதல்வர் நல்லசாமி, வேளாளர் மகளிர் கல்லுாரி முதல்வர் ஜெயந்தி, வேளாளர் கல்வியியல் கல்லுாரி முதல்வர் மல்லிகா, வேளாளர் மெட்ரிக் பள்ளி நிர்வாக அலுவலர் சென்னியப்பன் கலந்து கொண்டனர்.