sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறப்பு ஊக்கத்தொகையால் கரும்பு சாகுபடி அதிகரிக்க வாய்ப்பு

/

சிறப்பு ஊக்கத்தொகையால் கரும்பு சாகுபடி அதிகரிக்க வாய்ப்பு

சிறப்பு ஊக்கத்தொகையால் கரும்பு சாகுபடி அதிகரிக்க வாய்ப்பு

சிறப்பு ஊக்கத்தொகையால் கரும்பு சாகுபடி அதிகரிக்க வாய்ப்பு


ADDED : மார் 16, 2025 01:32 AM

Google News

ADDED : மார் 16, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறப்பு ஊக்கத்தொகையால் கரும்பு சாகுபடி அதிகரிக்க வாய்ப்பு

தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், 5வது முறையாக, வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கையை, நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தது.

இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் கூறியதாவது:

கே.பாலசுப்ரமணியன், பொதுச்செயலாளர், விவசாய முன்னேற்றக்கழகம்: விவசாயிகள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த, கூட்டுறவு கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியிடவில்லை. கரும்புக்கான நிலுவை தொகை குறித்தும் இடம்பெறவில்லை. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பணியாளர்களை,

விவசாய பணிக்கு பயன்படுத்தப்படும் என்ற அறிவிப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை மட்டுமே, மீண்டும் மெருகூட்டி, புதிய திட்டங்களாக அறிவிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. இது விவசாயிகளுக்கு, 'கானல் நீரான' பட்ஜெட்.

ஆர்.வேலுசாமி, மாநில தலைவர், நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்கம்: தமிழக அரசு, 2021ல், விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை எதுவும் நிறைவேற்றவில்லை. விவசாயிகளுக்கான தொலைநோக்கு திட்டமும் இடம்பெறவில்லை. வேளாண் துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை, வெற்று காகித அறிக்கையாகவே இருந்து வருகிறது. சட்டசபையில், பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு, வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது, பசுந்தோல் போர்த்திய புலிபோல் ஏமாற்று வேலை.

ஜெ.சவுந்தர்ராஜன், தலைவர், இளம் விவசாயிகள் சங்கம்: வேளாண்மை பட்ஜெட்டில், 300 கிராம இளைஞர்களுக்கு மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என கூறியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கையில், ஒரு மாவட்டத்திற்கு, 10 இளைஞர்கள் கூட பயிற்சியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் காய்கறி தேவையை பூர்த்தி செய்ய, அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா மாநில விவசாயிகளை நம்பியே சென்னை மற்றும் தமிழக மக்கள் உள்ளனர். விளைவித்த விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம், வேளாண்மை பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

எம்.ஜி.ராஜேந்திரன், பொதுச் செயலாளர், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம்: வேளாண் நிதிநிலை அறிக்கைக்காக,

விவசாயிகளிடம்

பல்வேறு கலந்தாய்வு நடத்தினர். ஆனால், அது எதுவும் பட்ஜெட்டில் எதிரொலிக்கவில்லை. பால் கொள்முதல் விலையை உயர்த்தினால், நுகர்வோருக்கும், பால் விற்பனை விலையை உயர்த்த வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, எம்.ஆர்.எப்., சோதனைக்கு மாற்றாக, வேறு பார்முலாவை பயன்படுத்தினால், ஒரு லிட்டர் பாலுக்கு கூடுதலாக, 56 காசு கிடைக்கும் என்று சொல்லியிருந்தும், இந்த பார்முலா மாற்றத்தை அறிவிக்காதது, பால் உற்பத்தியாளருக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

எஸ்.அமர்நாத், இயற்கை விவசாய பயிற்சியாளர், வெள்ளக்கல்பட்டி: உழவர் சந்தை காய்கறிகளை வீட்டிற்கே சென்று டெலிவரி செய்ய ஏற்பாடு செய்வது அபத்தமானது. நல்ல நிலையில் செல்லும் இந்த திட்டத்திலும் முறைகேடு நடக்க இது வழி வகுக்கும். மத்திய அரசின், 'இ-நாம்' திட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை இணைக்க, 39 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும் கண் துடைப்புதான். பழைய பம்பு செட்டை மாற்றுவது, மதிப்பு கூட்டு மையங்கள் அமைப்பது, இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகியவை ஏற்கனவே உள்ளவை தான். மொத்தத்தில் வேளாண் பட்ஜெட் கண்துடைப்பு பட்ஜெட்.

பி.கே.அன்பழகன், கரும்பு விவசாயி, பாப்பம்பாளையம்: உழவர்களை, அவர்களது கிராமங்களிலேயே சந்தித்து, தொழில் நுட்ப ஆலோசனை வழங்க, 'உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம்', விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை அறிவிப்பு, கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது. இதனால் கரும்பு சாகுபடி அதிகரிக்க வாய்ப்புள்ளது. விவசாயிகளுக்கு ஏற்றம் தரும் பட்ஜெட்டாக உள்ளது.

நமது நிருபர்






      Dinamalar
      Follow us