/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு போனஸ்ரம்ஜானுக்கான பேச்சுவார்த்தை உடன்பாடு
/
பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு போனஸ்ரம்ஜானுக்கான பேச்சுவார்த்தை உடன்பாடு
பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு போனஸ்ரம்ஜானுக்கான பேச்சுவார்த்தை உடன்பாடு
பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு போனஸ்ரம்ஜானுக்கான பேச்சுவார்த்தை உடன்பாடு
ADDED : மார் 20, 2025 01:34 AM
பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு போனஸ்ரம்ஜானுக்கான பேச்சுவார்த்தை உடன்பாடு
ஈரோடு:ஈரோடு வி.பி.ஆர்., காலேஜ் பீடி கம்பெனி, ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், ரம்ஜான் பண்டிகை போனஸ் உடன்பாடு ஏற்பட்டது.
பீடி சுற்றும் தொழிலாளர்களில், பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால், ரம்ஜான் பண்டிகையின்போது போனஸ் வழங்கப்படும். வரும், 31ல் ரம்ஜான் பண்டிகை கொண்டாடுகின்றனர். இதனால், ஏ.ஐ.டி.யு.சி., கொங்கு மண்டல ஐக்கிய பீடி தொழிலாளர் சங்கம் சார்பில், ஈரோடு வி.பி.ஆர்., காலேஜ் பீடி கம்பெனி நிர்வாகத்துடன் கடந்த, 14 முதல், 20 வரை போனஸ், இதர பொது கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. நடப்பு, 2024-25ம் ஆண்டுக்கான போனஸாக, அனைத்து பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கும் அவர் சுற்றிய, 1,000 பீடிகளுக்கு, 34 ரூபாய் வீதம் கணக்கிட்டு வழங்கப்படும். ரம்ஜான் பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன் அதாவது வரும், 22 முதல், 24க்குள் வழங்கப்படும். இது, கடந்தாண்டைவிட, 1,000 பீடிகளுக்கு, 2 ரூபாய் கூடுதலாகும்.
தினமும் குறைந்தபட்சம், 1,000 பீடி சுற்ற தேவையான அளவுக்கு இலை, துாள் வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களையும் பி.எப்., - ஈ.எஸ்.ஐ., திட்டத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும். சட்டப்படி கிராஜூட்டி வழங்க வேண்டும் என, நிர்வாக தரப்பில் ஏற்றனர். அகவிலைப்படி (டீ.ஏ.,) உயர்வான, 1,000 பீடிகளுக்கு, 3.78 ரூபாய், 1,000 பீடிகளுக்கு மொத்த பஞ்சப்படி, 155.73 ரூபாய், வரும் ஏப்., 1 முதல் அனைத்து பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கும் வழங்க நிர்வாகம் தரப்பில் ஒப்புக்கொண்டது. பேச்சுவார்த்தை மூலம், 1,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன் பெறுவர்.
பீடி நிர்வாகம் சார்பில் வி.பி.ஆர். தங்கமணி, அனந்தராமகிருஷ்ணன், சிவராம்கிருஷ்ணன், சங்கம் சார்பில் சின்னசாமி, யூசுப், ஜிலானி, மெகரூன் உட்பட பலர் பங்கேற்றனர்.