sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தேசிய நலவாழ்வு குழுமத்தில் பணிதகுதியான விண்ணப்பம் வரவேற்பு

/

தேசிய நலவாழ்வு குழுமத்தில் பணிதகுதியான விண்ணப்பம் வரவேற்பு

தேசிய நலவாழ்வு குழுமத்தில் பணிதகுதியான விண்ணப்பம் வரவேற்பு

தேசிய நலவாழ்வு குழுமத்தில் பணிதகுதியான விண்ணப்பம் வரவேற்பு


ADDED : மார் 22, 2025 01:16 AM

Google News

ADDED : மார் 22, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேசிய நலவாழ்வு குழுமத்தில் பணிதகுதியான விண்ணப்பம் வரவேற்பு

நாமக்கல்:'தேசிய நலவாழ்வு குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிகள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில், தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ், பல்வேறு திட்டங்களில் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர், -2, சமூக சேவகர், ஒன்று, ஆடியோலஜிஸ்ட் சிகிச்சையாளர்-, ஒன்று, செவிலியர், -2, மருந்தாளுனர், ஒன்று, பல்நோக்கு சுகாதார பணியாளர், -2.

ஆலோசகர், ஒன்று, சிகிச்சை உதவியாளர் (பெண்) ஒன்று, ஆய்வக நுட்புனர் நிலை-, 2ல், -5, தரவு உள்ளீட்டாளர், ஒன்று, பிசியோதெரபிஸ்ட், ஒன்று, மருத்துவமனை பணியாளர், துணை பணியாளர்-, இரண்டு, ஆகிய பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தேசிய நலவாழ்வு குழும விதிகளின்படி, மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் நிரப்பப்பட உள்ளது.

மேற்காணும் காலி பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பதவிகளுக்குரிய வயது வரம்பு, கல்வித்தகுதி மற்றும் இதர தகவல்கள் namakkal.nic.in என்ற இணையதளத்திலும், கலெக்டர் அலுவலகம், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் உரிய படிவத்தில், கல்வித்தகுதி, அனுபவச்சான்று மற்றும் இதர ஆவணங்களுடன் விண்ணப்பத்தை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ, வரும், 31, மாலை, 5:00 மணிக்குள், 'மாவட்ட சுகாதார அலுவலர், நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், நாமக்கல் மாவட்டம்--637003' என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us