/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விலங்குகளின் தாகம் தீர்க்க வனத்தில் நிரம்பும் 'குட்டை'
/
விலங்குகளின் தாகம் தீர்க்க வனத்தில் நிரம்பும் 'குட்டை'
விலங்குகளின் தாகம் தீர்க்க வனத்தில் நிரம்பும் 'குட்டை'
விலங்குகளின் தாகம் தீர்க்க வனத்தில் நிரம்பும் 'குட்டை'
ADDED : ஏப் 02, 2025 01:36 AM
விலங்குகளின் தாகம் தீர்க்க வனத்தில் நிரம்பும் 'குட்டை'
டி.என்.பாளையம்:சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டி.என்.பாளையம் வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, மான், கரடி உள்ளிட்ட விலங்குகள் வசிக்கின்றன.
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் நீர்நிலை வறண்டதால், தண்ணீர் தேடி இடம் பெயர்வது அதிகரிக்கும்.
இதனால் வனத்தை ஒட்டியுள்ள கிராம பகுதிகளில், யானைகள் நுழைவது அதிகரிக்கும். அவ்வாறு வரும்போது பயிர் சேதமும் ஏற்படும். இதை தவிர்க்கும் வகையில், 20க்கும் மேற்பட்ட இடங்களில் தொட்டி வடிவில் வனத்துறையினர் செயற்கை குட்டை அமைத்துள்ளனர்.
டி.என்.பாளையம் வனப்பகுதியில் உள்ள இந்த குட்டைகளில் தற்போது தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த வகையில் குண்டேரிப்பள்ளம் அணை, பெருமுகை அருகே சஞ்சீவராயன் குளத்துக்கு தண்ணீரை தேடி மாலை வேளைகளில் யானைகள் வரத் தொடங்கியுள்ளன. இவை வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் தடுக்கும் வகையில், செயற்கை குட்டைகள் தண்ணீர் ஊற்றி நிரப்பப்பட்டு வருகிறது.
இதன்படி டி.என்.பாளையம் வனச்சரகம் பங்களாபுதுார் மற்றும் கொண்டையம்பாளையத்தில் வன குட்டைகளை, டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு நிரப்பும் பணியில் டி.என்.பாளையம் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.