/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை கோவிலில் பக்தர்கள் வசதிக்காக பஸ் இயக்கம்
/
சென்னிமலை கோவிலில் பக்தர்கள் வசதிக்காக பஸ் இயக்கம்
சென்னிமலை கோவிலில் பக்தர்கள் வசதிக்காக பஸ் இயக்கம்
சென்னிமலை கோவிலில் பக்தர்கள் வசதிக்காக பஸ் இயக்கம்
ADDED : ஏப் 03, 2025 01:43 AM
சென்னிமலை கோவிலில் பக்தர்கள் வசதிக்காக பஸ் இயக்கம்
சென்னிமலை:சென்னிமலை, முருகன் கோவில் செல்லும் தார் சாலை பணி வனத்துறை தலையீட்டால், பாதியில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் வசதிக்காக கோவில் பஸ் இயக்கப்பட்டது.
சென்னிமலை, முருகன் கோவிலுக்கு செல்லும் 4 கி.மீ., துாரம் கொண்ட தார் சாலை மோசமான நிலையில், அதை அகலப்படுத்தி போடும் பணி, 6.70 கோடி மதிப்பில் கடந்த ஜூலை, 24ம் தேதி காணொலி காட்சி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார். அதன் பின்பு, வனத்துறை அளவீடு, அனுமதி என இரண்டு மாதங்கள் தாமத்திற்கு பின்பு பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணியானது ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போது எட்டு மாதங்களாகியும், 50 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. மலை பாதையில் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவது இல்லை, இதனால் பக்தர்கள் படிக்கட்டுகள் வழியாக சென்று முருகப்பெருமானை வழிபட்டு வந்தனர். இந்நிலையில், மலைப்பாதை பணியானது துரிதமாக நடைபெறவில்லை என, பக்தர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது, சுற்றுச்சூழல் பாதிக்கும்படி சாலை பணி நடந்து வந்ததாக கூறி வனத்துறையினர் பணிகளை நிறுத்த உத்தரவிட்டுள்ளனர்.
இதனால், சாலை போடும் பணி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் கோவில் பஸ்கள் இரண்டையும் கோவில் நிர்வாகம் இயக்கி வருகிறது. ஆண்டு கணக்கு முடித்து புது கணக்கு போடும் நிகழ்வு உள்ளதால், பஸ் இயக்கப்பட்ட நிலையில், 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் புதுகணக்கு போட்டனர். மேலும், பக்தர்களும் அதிகளவில் தரிசனத்திற்கு வந்திருந்தனர்.