/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பள்ளி பஸ் மோதியதில் 3 வயது குழந்தை காயம்
/
பள்ளி பஸ் மோதியதில் 3 வயது குழந்தை காயம்
ADDED : ஜன 22, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளி பஸ் மோதியதில் 3 வயது குழந்தை காயம்
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த காட்டம்மன்புதுாரை சேர்ந்தவர் விஜி, ௩௦; தனது மூன்று வயது பெண் குழந்தையுடன், டி.வி.எஸ், மொபட்டில், ஆச்சியூர் ரோட்டில், நேற்று மாலை சென்றார். அவ்வழியே வந்த தனியார் பள்ளி பஸ், எதிர்பாராதவிதமாக மொபட்டில் மோதியது. இதில் மொபட்டில் இருந்து விழுந்த குழந்தை காயமடைந்தது. இதை
யறிந்த அப்பகுதி மக்கள், பஸ்சை சிறைபிடித்தனர். தகவலறிந்து தாராபுரம் போலீசார் சென்றனர். குறுகலான சாலையாக இருப்பதால், இந்த வழியாக பஸ்கள் வரக்கூடது எனக்கூறி, போலீசாரிடம் மக்கள் வாக்குவாதம் செய்தனர். போலீசார் சமரசம் செய்ததை அடுத்து கலைந்து சென்றனர்.