/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மரபணு மாற்று பருத்தி விதை விற்றால் நடவடிக்கை பாயும்
/
மரபணு மாற்று பருத்தி விதை விற்றால் நடவடிக்கை பாயும்
மரபணு மாற்று பருத்தி விதை விற்றால் நடவடிக்கை பாயும்
மரபணு மாற்று பருத்தி விதை விற்றால் நடவடிக்கை பாயும்
ADDED : மார் 02, 2025 07:04 AM
ஈரோடு: 'மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுக்கு, 720 ெஹக்டேரில் பருத்தி சாகுபடியாகிறது. வரும் கோடை காலத்தில் பருத்தி சாகுபடி செய்ய ஏதுவாக வீரிய பருத்தி விதைகள் தற்போது விதை விற்-பனை நிலையங்களில் வரப்பெற்றுள்ளது.இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பி.டி., எனப்படும் காய்பு-ழுவுக்கு எதிர்ப்பு சக்தி உடைய மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளே பெரும்பான்மையான விவசாயிகளால் சாகுபடி செய்-யப்பட்டு வருகிறது. ஆனால் அரசால் அங்கீகரிக்கப்படாத எச்.டி., மரபணு மாற்ற பருத்தி விதைகளை சட்ட விரோதமாக விற்பனை செய்ய முயற்சிக்கின்றனர். இதை சாகுபடி செய்தால், பெரும் மகசூல் இழப்பு ஏற்படும். சுற்றுச்சூழல் பாதிக்கும். மரபணு மாற்ற பருத்தி விதைகளை விற்பனை செய்வது சட்ட விரோதம். மாவட்டத்தில் விதை விற்பனை நிலையங்களில் தரமான பருத்தி விதை விற்பனை செய்வதை உறுதி செய்ய, 156 பருத்தி விதை மாதிரிகள் முளைப்பு திறன் பரிசோதனைக்கும், 97 மாதிரிகள் இன துாய்மை பரிசோதனைக்கும், 246 விதை மாதிரிகள், பி.டி.மரபணு பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டது. அனைத்து வகைகளும் தரமான விதைகள் என தேர்ச்சி பெற்றுள்ளன. தர-மற்ற விதைகளை விற்பனை செய்பவர்கள் மீது இன்றியமையா பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அது-போல, விதை உரிமம் பெறாமல் விற்பனை செய்வது சட்ட விரோதமாகும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.