/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளங்களை சேர்ப்பது கலந்தாய்வில் உள்ளது: கலெக்டர்
/
அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளங்களை சேர்ப்பது கலந்தாய்வில் உள்ளது: கலெக்டர்
அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளங்களை சேர்ப்பது கலந்தாய்வில் உள்ளது: கலெக்டர்
அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளங்களை சேர்ப்பது கலந்தாய்வில் உள்ளது: கலெக்டர்
ADDED : ஆக 31, 2024 01:05 AM
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்-கரா தலைமையில் வேளாண் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்ட விவாதம் வருமாறு: கீழ்பவானி பாசன விவசாயி கள்: கீழ்பவானி வாய்க்கால் திறந்த அடுத்த சில நாளில் உடைப்பு ஏற்பட்டு, 5 நாட்களுக்கு மேல் தண்ணீர் நிறுத்தப்பட்டது. நீர் திறப்பு நாளை அதிகரித்து வழங்க வேண்டும். மேட்டூர் வலசு கரை வாய்க்கால் பாசன சபை பழனிசாமி: மேட்டூர் வலது கரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டும், ஆக்கிரமிப்பு அகற்றப்படாததாலும், சில கடைமடை பகுதியில் மேடாக உள்ளதால், தண்ணீர் ஏறாமல்,
100க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாதித்துள்ளன. தண்ணீர் திறந்து, 30 நாட்களுக்கு மேலாகியும், சில இடங்களுக்கு, 3 நாட்கள் கூட தண்ணீர் கிடைக்-கவில்லை.
தமிழக விவசாயிகள் சங்கம் பெரியசாமி: அத்திக்கடவு - அவிநாசி திட்டம், 15 நாளுக்கு முன் திறக்கப்பட்டு அன்னுார் வரை உள்ள குளங்கள் நிரம்புகின்றன. திட்டம்-2ஐ நிறைவேற்றி, விடுபட்ட குளங்களையும், புதிய
குளங்களையும் சேர்க்க வலியுறுத்துகின்-றனர். அவ்வாறானால், கீழ்பவானி, பிற கால்வாய்க்கான பாசன நீர் பாதிக்காத வகையில் அறிக்கை பெற வேண்டும். கலெக்டர் ராஜகோபால் சுன்கரா: அத்திக்கடவு - அவிநாசி திட்டம்-1ல் விடுபட்ட குளங்களை சேர்ப்பதே, சாத்தியமில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதில், புதிய குளங்களை சேர்ப்பது என்பது புதிய கோரிக்கையாக
உள்ளது. இருந்தாலும், திட்டம்-1 பற்றி கலந்தாலோசனை தொடர்ந்து நடந்து வருகிறது. அந்நிலையில், திட்டம் -2 பற்றி அரசின் கொள்கை முடிவாகும். இதுபற்றி, முடிவுகள் எடுத்த பின் கூறுகிறோம். இவ்வாறு பேசினர்.