/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வண்டல் மண் எடுத்து செல்ல எதிர்ப்பு வனத்துறையை கண்டித்து முற்றுகை
/
வண்டல் மண் எடுத்து செல்ல எதிர்ப்பு வனத்துறையை கண்டித்து முற்றுகை
வண்டல் மண் எடுத்து செல்ல எதிர்ப்பு வனத்துறையை கண்டித்து முற்றுகை
வண்டல் மண் எடுத்து செல்ல எதிர்ப்பு வனத்துறையை கண்டித்து முற்றுகை
ADDED : ஜூலை 06, 2024 06:06 AM
புன்செய்புளியம்பட்டி : பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் இருந்து, விவசாய பயன்பாட்டுக்கு இலவசமாக வண்டல் மண் எடுத்துக்கொள்ள, விவசாயிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்-படி விவசாயிகள் உரிய ஆவணங்களை கொடுத்து, அனுமதி பெற்று, நீர்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் லாரிகளில் வண்டல் மண் எடுத்து செல்கின்றனர்.
இந்நிலையில் வண்டல் மண் எடுத்து வரும் வாகனங்கள், வனத்துறை சாலைகளில் இயக்க கூடாது எனக்கூறி வனத்துறை ஊழியர்கள், வாகனங்களை காராச்சிகொரை வனசோதனை சாவ-டியில் தடுத்து நிறுத்தினர். இதனால், 200க்கும் மேற்பட்ட வண்டல் மண் லோடு ஏற்றிய லாரிகள், மண் எடுக்க செல்லும் லாரிகள் வரிசை கட்டி நின்றன. இதனால் வன சோதனை சாவ-டியை முற்றுகையிட்டு, லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: லாரிகள் இயக்கப்படும் சுஜ்ஜில்குட்டை அருகே உள்ள பகுதியில் அளவீடு செய்ததில், அந்த இடம் வனத்துறைக்கு சொந்தமானது என தெரிந்தது.
மேலும் வனத்துறையிடம் அனுமதி பெறாமல் தற்காலிக சாலை அமைக்க மரங்களை சேதப்படுத்தியுள்ளனர். எனவே வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் லாரிகளை அனுமதிக்க முடியாது. இவ்வாறு கூறினர்.
இதைதொடர்ந்து, வனத்துறை, பொதுப்பணித்துறை அதிகா-ரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், வனத்துறை சாலையை தவிர்த்து, பிற வழியில் செல்லலாம் என முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மாலை, ௪:௦௦ மணிக்கு பிறகு, வண்டல் மண் எடுக்க லாரிகள் புறப்பட்டு சென்றன.