தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 10 ஆண்டுகளுக்குப் பிறகு துார் வாரப்படும் வாய்க்கால்

10 ஆண்டுகளுக்குப் பிறகு துார் வாரப்படும் வாய்க்கால்

10 ஆண்டுகளுக்குப் பிறகு துார் வாரப்படும் வாய்க்கால்


ADDED : செப் 11, 2024 04:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2024 04:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு, சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து, நஞ்சை ஊத்துக்-குளி வாய்க்கால் செல்கிறது. இதன் மூலம், 2,450 ஏக்கர் பாசனம் பெறுகிறது. 15 கி.மீ., துாரம் கொண்ட வாய்க்காலில், ஆண்டுக்கு, 10 மாதங்கள் நீரோட்டம் இருக்கும்.

கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் வாய்க்கால் துார் வாரப்பட்டது. தற்போது புதர் மண்டி, குப்-பைக்கழிவு அடைத்துள்ளதால், நீரோட்டம் தடைபட்டுள்ளது. இதுகுறித்த புகாரால் நீர்வளத்துறை அலுவலர் திருமூர்த்தி தலை-மையில்,

அலுவலர்கள் வாய்க்காலை ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை அனுப்பினர்.இந்நிலையில் வாய்க்காலை துார்வாரும் பணி நேற்று தொடங்கி-யது. அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார். இதுகுறித்து அமைச்சர் கூறியதாவது: வாய்க்காலில் மக்கள் குப்பை கொட்டு-கின்றனர். இதனால் கடைமடை வரை

தண்ணீர் செல்வதில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் துார் வாரும் பணி துவங்கி உள்ளது. குப்பை கொட்டாமல் இருக்க வாய்க்காலின் இருபுறமும் தடுப்பு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டு வசதி

வாரியத்துக்கு நிலம் வழங்கியவர்கள் பிரச்னை தொடர்பாக தமிழகத்தில், 16 இடங்களில் புகார் பெட்டி வைக்கப்-பட்டது. இவற்றில், 5,500 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர்

கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us