ADDED : ஆக 20, 2024 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரத்தில் இரண்டாவது நாளாக கொட்டிய கனமழையால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தாராபுரம் நகரில் நேற்று முன்தினம் ஒரு மணி நேரம் மழை கொட்டியது. இந்நிலையில் நேற்றும் மதியம், 3:30 மணியளவில் சாரல் மழை பெய்ய
தொடங்கியது.
சிறிது நேரத்தில் வலுத்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழையாக கொட்டித் தீர்த்தது. இதனால் தாராபுரம் நகர சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவியர் நனைந்தபடி சென்றனர்.

