ADDED : ஆக 08, 2024 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அமைதி பேரணி நடந்தது.
தாராபுரம் சாலை சி.எஸ்.ஐ., தேவாலயம் முன் துவங்கிய அமைதி பேரணி, பஸ் ஸ்டாண்ட் வரை சென்றது. காங்கேயம் நகர தி.மு.க., செயலர் சேமலையப்பன் தலைமை வகித்தார். பேரணி முடிவில் கருணா-நிதி திருவுருப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி மரி-யாதை செலுத்தினர். தலைமை பொதுக்குழு உறுப்பினர் கார்த்தி-கேயன், காங்கேயம் தெற்கு ஒன்றிய செயலர் சிவானந்தன், வடக்கு ஒன்றிய செயலர் கருணைபிரகாஷ் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.