/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போட்டித்தேர்வை கசப்பு என நினைப்போருக்கு வெல்லக்கட்டியாக மாற்றுவோம்; வேலைவாய்ப்பு அதிகாரி
/
போட்டித்தேர்வை கசப்பு என நினைப்போருக்கு வெல்லக்கட்டியாக மாற்றுவோம்; வேலைவாய்ப்பு அதிகாரி
போட்டித்தேர்வை கசப்பு என நினைப்போருக்கு வெல்லக்கட்டியாக மாற்றுவோம்; வேலைவாய்ப்பு அதிகாரி
போட்டித்தேர்வை கசப்பு என நினைப்போருக்கு வெல்லக்கட்டியாக மாற்றுவோம்; வேலைவாய்ப்பு அதிகாரி
ADDED : பிப் 22, 2025 05:21 AM
கோபி: ''போட்டித்தேர்வு என்றாலே பிடிக்காது கசப்பு என நினைப்போ-ருக்கு, அத்தேர்வை அவர்களுக்கு வெல்லக்கட்டியாக நாங்கள் மாற்றி காட்டுவோம்,'' என, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சாந்தி பேசினார்
.ஈரோடு மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் இணைந்து, விடுதிகளில் தங்கி பயிலும், மாணவ, மாணவியருக்கான தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு கோபியில் நேற்று நடந்தது. இதில் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சாந்தி தலைமை வகித்து பேசியதாவது:
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் இலவசமாக வழங்கும் பயிற்சியை விட்டு விட்டு நீங்கள் எங்கு சென்றும் தேட வேண்டியதில்லை. இப்பயிற்சியில் தனியாரில் ஒரு பேக்கே-ஜூக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியி-ருக்கும். எனவே இந்த பயிற்சியை நீங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.எங்கள் பயிற்சி வகுப்பில் குருப்-2 போட்டித் தேர்வுக்கு பயின்ற, 60 பேரில் 25 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல் குரூப்-4 தேர்வில், 12 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தற்போது வேலை வாய்ப்பு அலுவலகத்தில், குரூப்-4 போட்டித்தேர்வுக்கு, 90 மாணவியர் பயிற்சி பெறுகின்றனர். வரும், 24 முதல் டைப்பிஸ்ட் பணிக்கு கவுன்சிலிங் நடக்கிறது. போட்டித்தேர்வு என்றாலே பிடிக்காது கசப்பு என நினைப்போருக்கு, அத்தேர்வை அவர்களுக்கு வெல்லக்கட்டியாக நாங்கள் மாற்றி காட்டுவோம். அந்தளவுக்கு நீங்கள் அத்தேர்வை எழுத, அதற்கு தேவையான பாட பொருட்கள் தந்து பயிற்சி அளிக்கிறோம். ஆனால், அதற்-கான பயிற்சியும், முயற்சியும் நீங்கள் தான் எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.உயர்கல்வி மற்றும் நுழைவுத்தேர்வு குறித்து ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குனர் ராதிகா பேசினார். இளநிலை வேலைவாய்ப்பு அலு-வலர் பவித்ரா, கண்காணிப்பாளர் அனிதா, கோபி தாசில்தார் சர-வணன் பங்கேற்றனர்.