/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
துணிகளை திருடிய பெண்கள் ஊழியரிடம் சிக்கியதால் ஓட்டம்
/
துணிகளை திருடிய பெண்கள் ஊழியரிடம் சிக்கியதால் ஓட்டம்
துணிகளை திருடிய பெண்கள் ஊழியரிடம் சிக்கியதால் ஓட்டம்
துணிகளை திருடிய பெண்கள் ஊழியரிடம் சிக்கியதால் ஓட்டம்
ADDED : செப் 07, 2024 07:58 AM
புன்செய் புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியில் எஸ்.ஆர்.டி., நகர் அருகே ஆனந்தன் என்பவர் ரெடிமேட் ஷோரூம் நடத்தி வருகிறார். நேற்று முன்-தினம் மதியம் நான்கு பெண்கள் ஆளுக்கு ஒரு பையுடன் கடைக்கு வந்தனர். பேண்ட், சர்ட் வாங்குவதாக கூறி துணிகளை நோட்டமிட்டுள்ளனர். அப்போது இரண்டு பெண்கள் கடை பெண் ஊழியரை திசை திருப்பி துணி எடுப்பது போல் நடித்-தனர்.
சுடிதார் மற்றும் சேலை அணிந்த இரண்டு பெண்கள், கடையின் மற்றொரு பகுதிக்கு சென்று, அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரெடிமேட் பேண்ட், சர்ட்களை பண்டல் பண்டலாக திருடி கொண்டு வந்த பையில் வைத்துள்ளனர். இதை பெண் ஊழியர் பார்த்து, உரிமையாளருக்கு செல்போனில் தகவல் தெரிவித்-துள்ளார். இதனால் இரு பெண்களும் திருடிய துணிகளை வைத்து-விட்டு, மற்ற இரு பெண்களையும் அழைத்துக் கொண்டு ஓடி விட்டனர். இது தொடர்பான சிசிடிவி காட்டி தற்போது பரவி வருகிறது. பட்டப்பகலில் ரெடிமேட் கடையில் பெண்கள் கைவ-ரிசை காட்டியது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.