/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இளம்பெண் தற்கொலை மர்மம் உள்ளதாக புகார்
/
இளம்பெண் தற்கொலை மர்மம் உள்ளதாக புகார்
ADDED : ஜூலை 15, 2011 12:37 AM
பெருந்துறை: பெருந்துறை அருகே இளம்பெண் தற்கொலையான சம்பவம் குறித்து விசாரிக்க வேண்டுமென, பெற்றோர் போலீஸில் புகார் செய்தனர்.
பெருந்துறை அடுத்த துடுப்பதி சீரங்ககவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் விஜய் என்ற வெங்கடாசலம் (35). டிரைவர். இவரது மனைவி தீபா (30). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வைஷ்ணவி (8), சஞ்சீவிகுமார் (6) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்னையால், தீபா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி, தீபாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு விஜய் தகவல் தெரிவித்தார். அவர்கள் வரும் முன், தீபாவின் உடலை தகனம் செய்ய விஜய் ஏற்பாடு செய்தார். அதற்குள் உறவினர்கள் வந்துவிட்டதால், சுடுகாட்டில் வைக்கப்பட்டிருந்த தீபா உடலை பார்த்த பெற்றோர், தனது மகள் சாவில் மர்மம் உள்ளதாக கூறினர். தீபாவின் தந்தை ஜெயபால் கொடுத்த புகாரின் பேரில், பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் விசாரித்து வருகிறார். தீபாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.