ADDED : ஏப் 16, 2024 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி;பவானி தீயணைப்புத்துறை சார்பில், தீத்தொண்டு வார விழா நேற்று நடந்தது.
பவானியில் மக்கள் கூடும் பல்வேறு இடங்களில், துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் தீ விபத்தின் போது பாதுகாப்பாக நடந்து கொள்வது, தீயை அணைப்பது, கட்டுப்படுத்துவது, முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து, நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையில், விழிப்புணர்வு செய்யப்பட்டது. இதேபோல் மொடக்குறிச்சியில், சிறப்பு நிலைய அலுவலர் நடராஜன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கினர்.

