/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எழுத்தறிவு திட்டத்தில் கணக்கெடுப்பு
/
எழுத்தறிவு திட்டத்தில் கணக்கெடுப்பு
ADDED : மே 24, 2024 06:43 AM
ஈரோடு : வயது வந்தோர் கல்வி திட்டம் - புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட எழுத, படிக்க தெரியாதவர்கள் இருப்பின், அருகே உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் தெரிவித்து பயன் பெறலாம். இதன்படி புதிய பாரத எழுத்தறிவு திட்டம், 2022-27 செயல்படுத்தப்படுகிறது. இதில், 2024-25ம் கல்வி ஆண்டுக்கான கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 14 யூனியனில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளை ஒட்டிய அனைத்து குடியிருப்பு பகுதிகளில் கற்போர், தன்னார்வலர்களை கண்டறியும் கணக்கெடுப்பு பணியும் நடந்து வருகிறது.
மையங்களில் கற்போருக்கு சிலேட், பென்சில் உட்பட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு, 6 மாத கால பயிற்சி, பள்ளி வேலை நாட்களில் தினமும், 2 மணி நேரம் கற்பிக்கப்பட்டு, தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்கப்படும்.