ADDED : நவ 24, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
த.வெ.க., விழிப்புணர்வு
ஈரோடு, நவ. 24-
தமிழக வெற்றிக் கழகத்தின் ஈரோடு மாநகர் சார்பில், வாக்காளர் சிறப்பு முகாம் குறித்த விழிப்புணர்வு நேற்று மேற்கொள்ளப்பட்டது. அக்கட்சியினர் வீடு, வீடாக சென்று பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள வாக்காளர்களிடம் அறிவுறுத்தினர். மாநகர தலைவர் ஹக்கீம், மாநகர செயலாளர் சரவணன் அருண், கார்த்தி, மகளிரணியை சேர்ந்த பவானி, புகழ், சத்யா உள்ளிட்ட பலர்
பங்கேற்றனர்.

