ADDED : ஜன 19, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பா.ஜ., நிர்வாகிகள் தேர்வு
பெருந்துறை:ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ., நிர்வாகிகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மண்டல தலைவர்களின் பெயர் பட்டியலை, மாநில துணைத்தலைவர் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ளார். பெருந்துறை நகர் மண்டல் தலைவராக பூர்ணசந்திரன், மண்டல பிரதிநிதியாக சரவணன், பெருந்துறை வடக்கு ஒன்றிய மண்டல் தலைவராக உமா, மண்டல பிரதிநிதியாக குமார் சுந்தரம், பெருந்துறை தெற்கு ஒன்றிய மண்டல் தலைவராக நந்தகுமார், மண்டல பிரதிநிதியாக ஸ்ரீகாந்த ஈஸ்வரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.