/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நாய்களால் பலியான ஆடுகளுக்குஇழப்பீடு கேட்டு ஆர்ப்பாட்டம்
/
நாய்களால் பலியான ஆடுகளுக்குஇழப்பீடு கேட்டு ஆர்ப்பாட்டம்
நாய்களால் பலியான ஆடுகளுக்குஇழப்பீடு கேட்டு ஆர்ப்பாட்டம்
நாய்களால் பலியான ஆடுகளுக்குஇழப்பீடு கேட்டு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 24, 2025 01:20 AM
நாய்களால் பலியான ஆடுகளுக்குஇழப்பீடு கேட்டு ஆர்ப்பாட்டம்
காங்கேயம்,:காங்கேயம், வெள்ளகோவில், முத்துார், காடையூர், ஊதியூர் கிராம பகுதிகளில், கடந்த சில மாதங்களாக, தெருநாய்கள் கடித்து ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் பலியாவது அதிகரித்துள்ளது. இதனால் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பீதியில் உள்ளனர். இதுவரை, 500க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் மற்றும் கன்றுக்குட்டிகளை, தெருநாய்கள் கடித்து குதறி கொன்றுள்ளதாகவும், விவசாயிகள் கூறுகின்றனர்.இந்த நிலையில் காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், கம்யூ., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தெருநாய்களால் பலியான கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில், 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.