/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓவர் டேங்க்குக்கு 'பிரியாவிடை'நொச்சிக்காட்டுவலசில் நெகிழ்ச்சி
/
ஓவர் டேங்க்குக்கு 'பிரியாவிடை'நொச்சிக்காட்டுவலசில் நெகிழ்ச்சி
ஓவர் டேங்க்குக்கு 'பிரியாவிடை'நொச்சிக்காட்டுவலசில் நெகிழ்ச்சி
ஓவர் டேங்க்குக்கு 'பிரியாவிடை'நொச்சிக்காட்டுவலசில் நெகிழ்ச்சி
ADDED : ஜன 25, 2025 01:55 AM
ஓவர் டேங்க்குக்கு 'பிரியாவிடை'நொச்சிக்காட்டுவலசில் நெகிழ்ச்சி
ஈரோடு, : ஈரோடு மாநகராட்சியை ஒட்டிய 46 புதுார் பஞ்., நொச்சிகாட்டுவலசு பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கு அப்பகுதியில் உள்ள, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. இந்த டேங்க், 1988ல் கட்டப்பட்டது. இதனால், 70,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அதே பகுதியில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கும் வந்தது. இதனால் பழைய நீர்த்தேக்க தொட்டியை இடிக்கும் பணி நேற்று துவங்கியது. இதையறிந்த அப்பகுதி மக்கள், பல ஆண்டு காலமாக தங்களின் தாகம் தீர்த்த ஓவர் டேங்க்குக்கு, பூமாலை அணிவித்து, பூக்கள் துாவி பிரியாவிடை கொடுத்தனர். சில மணி நேரத்தில் இயந்திரம் மூலம் ஓவர்டேங்க் இடித்து அகற்றப்பட்டது.