ADDED : ஜன 29, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின்சாரம் தாக்கி விவசாயி பலி
தாராபுரம்:தாராபுரம் அருகே அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த விவசாயி பலியானார்.தாராபுரத்தை அடுத்த கொளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் சிராஜுதீன், 42; நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில் குத்தகை தோட்டத்துக்கு நடந்து சென்றார். அப்போது அறுந்து கிடந்த மின் வயரை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியானார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், உறவினர்கள் நள்ளிரவில் தோட்டத்துக்கு சென்றபோது, இறந்து கிடந்தார். புகாரின்படி தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

