ADDED : ஜன 31, 2025 01:28 AM
மக்கள் குமுறல்; சீமான் உறுதி
பவானி:பவானி அருகே பெருமாள் மலையில் உள்ள மங்களகிரி பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 5.75 ஏக்கர் நிலம், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலத்தில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கை தமிழர், அருந்ததிய இன மக்கள் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த இடத்தை அளவீடு செய்து வாடகை வசூலிக்க, ஹிந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. குடியிருப்புவாசிகளோ வாடகை செலுத்தமாட்டோம், அதே இடத்தில் வீட்டுமனை வழங்க வேண்டுமென்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அப்பகுதி மக்களை நேற்று சந்தித்தார். பிறகு சீமான் கூறியதாவது: இப்பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற சொல்வதும், வாடகை வசூலிப்பதும் இவர்களுக்கு செய்யும் தீங்கு. ஓட்டு மட்டும் வேண்டும், ஆனால், இவர்கள் குடியிருப்பதற்கு வீடு தர மாட்டீர்களா?. இவ்வாறு கூறினார்.

