/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சி ஆயுர்வேதமருந்தகம் மூடல்
/
மாநகராட்சி ஆயுர்வேதமருந்தகம் மூடல்
ADDED : பிப் 05, 2025 01:22 AM
மாநகராட்சி ஆயுர்வேதமருந்தகம் மூடல்
ஈரோடு : ஈரோடு மாநகராட்சி மரப்பாலத்தில், இலவச ஆயுர்வேத மருந்தகம் செயல்பட்டது. மருந்தகத்துக்கு மக்களிடையே அமோக வரவேற்பு இருந்தது. குறிப்பாக தோல் தொடர்பான பிரச்னைக்கு மக்கள் ஆர்வத்துடன் மாத்திரை பெற்று சென்றனர். மருந்தகத்தில் டாக்டராக ஆனந்தகுமார், மூன்று பணியாளர்கள் பணியாற்றினர். கடந்த, 31ல் ஆனந்தகுமார் பணி ஓய்வு பெற்றார்.
டாக்டர் நியமிக்கப்படாததால், 31ம் தேதி மாலையுடன் மருந்தகத்துக்கு பூட்டு போடப்பட்டது. ஒரு மருத்துவ பணியாளர், நகர்புற சுகாதார நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மீதி இரு பணியாளர்களுக்கு பணி வழங்கவில்லை. இதை அறியாத மக்கள் மருந்து, மாத்திரை மற்றும் ஆலோசனை பெற தினமும் வந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர். மருந்தகத்துக்கு புதிய டாக்டரை நியமித்து மீண்டும் செயல்பட மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.