ADDED : பிப் 09, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வரிகளை செலுத்த மாநகராட்சி அறிவுரை
ஈரோடு,:ஈரோடு மாநகராட்சிக்கு 2024-25 நிதியாண்டில் செலுத்த வேண்டிய வரியை உடனடியாக செலுத்த, மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
மாநகராட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:மாநகராட்சிக்கு, 2024-25 நிதியாண்டில் செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், குத்தகையினங்கள், பாதாள சாக்கடை இணைப்புக் கட்டணம் மற்றும் இதர வரியினங்கள் உடனடியாக செலுத்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கையை தவிர்க்க வேண்டும். இதற்காக வரி வசூல் மையங்கள், சனிக்கிழமை உட்பட அனைத்து வேலை நாட்களிலும் (அரசு விடுமுறை நாட்கள் தவிர) காலை, 9:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை செயல்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.