/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொங்கலம்மன் கோவிலில்நடந்த தேரோட்டம்
/
கொங்கலம்மன் கோவிலில்நடந்த தேரோட்டம்
ADDED : பிப் 12, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொங்கலம்மன் கோவிலில்நடந்த தேரோட்டம்
ஈரோடு, :ஈரோடு கொங்கலம்மன் கோவிலில், நடப்பாண்டு தைப்பூச தேரோட்ட விழா, நேற்று வழக்கமான உற்சாகத்துடன்
நடந்தது. காலை, 7:30 மணிக்கு உற்சவமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு கொண்டு வரப்பட்டார்.
தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, 8:45 மணிக்கு நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆர்.கே.வி.ரோடு, மணிக்கூண்டு, பொன்வீதி, காரைவாய்க்கால், பெரியார் மன்றம் வழியாக சென்று மீண்டும் மணிக்கூண்டு வந்து கோவில் முன்பு நிலை நிறுத்தப்பட்டது. இன்று காலை விடையாற்றி உற்சவம், மஞ்சள் நீராடல், அம்மன் வீதி உலா, மாலையில் தெப்போற்சவம் நடக்கிறது.

