/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க., எம்.எல்.ஏ., வாக்காளர்களுக்கு நன்றி
/
தி.மு.க., எம்.எல்.ஏ., வாக்காளர்களுக்கு நன்றி
ADDED : பிப் 14, 2025 01:18 AM
தி.மு.க., எம்.எல்.ஏ., வாக்காளர்களுக்கு நன்றி
ஈரோடு, :ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., சந்திரகுமார், நேற்று ஈரோடு திரும்பினார். ப.செ. பூங்காவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவித்தார். பின், அருள் வேலவன் நகர், காந்தி நகர், சூளை, கனி ராவுத்தர் குளம், தண்ணீர்பந்தல்பாளையம் போன்ற பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பிரசாரத்தில் வீதிவீதியாக சென்றபோது, மக்கள் கூறிய கருத்து, குறைகளை கேட்டறிந்துள்ளேன். அடுத்த, 15 நாட்களுக்குள் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அவருடன் தி.மு.க., மாநகர செயலாளர் சுப்பிரமணியம், கவுன்சிலர் தமிழ்பிரியன், காங்., மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.