ADDED : பிப் 26, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இலவச அக்குபிரசர் மருத்துவ முகாம்
பெருந்துறை, :முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 77வது பிறந்த நாளை முன்னிட்டு, பெருந்துறை அ.தி.மு.க., கிழக்கு ஒன்றியம் சார்பாக, நல்லாம்பட்டியில் இலவச அக்குபிரசர் மருத்துவ முகாம் நடந்தது. கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ஜெயகுமார் முன்னிலை வகித்தார். ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் கருப்பணன், முகாமை துவக்கி வைத்தார். மருத்துவர் நிர்மலாதேவி மற்றும் குழுவினர் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர். பெருந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயன், நல்லாம்பட்டி நகர செயலாளர் துரைசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.