ADDED : மார் 14, 2025 01:39 AM
கவுந்தப்பாடி அருகே மறியல்
கோபி:கவுந்தப்பாடி அருகே பாப்பாங்காட்டூரை சேர்ந்த விவசாயி கார்த்தி, 42; தோட்டத்தில் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று காலை தோட்டத்துக்கு சென்றபோது தொழுவத்தில் கட்டியிருந்த எட்டு வெள்ளாடுகள் இறந்து கிடந்தன. ஒரு ஆடு உயிருக்கு போராடி கொண்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், கார்த்திக் அடங்கிய குழுவினர், பலியான வெள்ளாடுகளை ஈரோடு பிரதான சாலையான ஐய்யம்பாளையம் பிரிவில் போட்டு, நேற்று காலை, 9:45 மணிக்கு மறியலில்
ஈடுபட்டனர். ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க கோரியும், ஆடுகளை கொல்லும் தெருநாய்களை கட்டுப்படுத்த கோரியும், 30க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டு கோஷமிட்டனர். கவுந்தப்பாடி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய வழிவகை செய்வதாக கூறவே, 10:15 மணிக்கு கலைந்து
சென்றனர்.