/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பஸ் ஸ்டாண்டில் நடந்த 'இயற்கை சந்தை'
/
பஸ் ஸ்டாண்டில் நடந்த 'இயற்கை சந்தை'
ADDED : மார் 16, 2025 01:27 AM
பஸ் ஸ்டாண்டில் நடந்த 'இயற்கை சந்தை'
ஈரோடு:மகளிர் திட்டம் சார்பில் மகளிர் குழு உறுப்பினர், இயற்கை முறை வேளாண்மை அங்கக சான்றிதழ் பெற்ற விவசாயிகள், தாங்கள் விளைவித்த மற்றும் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் 'இயற்கை சந்தை' ஈரோடு பஸ் ஸ்டாண்ட்டில் நேற்று துவங்கியது.
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 80க்கும் மேற்பட்ட மகளிர் குழுவினர், விவசாயிகள் காய்கறிகள், பழங்கள், அரிசி, எள், நாட்டு சர்க்கரை, மஞ்சள் துாள், காளான், தேன் போன்றவைகளை விற்பனைக்கு வைத்தனர். தவிர மகளிர் குழுவினரால் தயாரிக்கப்பட்ட புடவை, பெட்ஷீட், துண்டு, பல்வேறு வகையிலான பேக்குகள், ஆடை, கூடை, வீட்டு உபயோகத்துக்கான அரிவாள், அரிவாள்மனை, கத்தி, தோசைக்கல், சப்பாத்தி கருவி உட்பட, 500க்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனைக்கு வைத்தனர். பஸ் ஸ்டாண்ட் வளாகம் என்பதால், ஏராளமான பயணிகள் இவற்றை வாங்கியும், பார்வையிட்டும் சென்றனர். இன்றும் காலை, 9:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை 'இயற்கை சந்தை' நடக்கிறது.