/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பழங்குடியினர் நலவாரியஅட்டை பெற சிறப்பு முகாம்
/
பழங்குடியினர் நலவாரியஅட்டை பெற சிறப்பு முகாம்
ADDED : மார் 16, 2025 01:28 AM
பழங்குடியினர் நலவாரியஅட்டை பெற சிறப்பு முகாம்
நாமக்கல்:கொல்லிமலை பகுதி பழங்குடியினர் நல வாரியத்தில் உறுப்பினர் அடையாள அட்டை பெற, கொல்லிமலையில் உள்ள, 14 பஞ்சாயத்துகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
முகாமில் கலந்துகொள்பவர்கள், குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப தலைவரின் புகைப்படம், 2 ஆகியவற்றை எடுத்துச்செல்ல வேண்டும். 25ல் அரியூர் நாடு, கிராம ஊராட்சி அலுவலகத்தில், காலை, 10:00 முதல் மாலை, 5:45 மணி வரை; 26ல் பைல்நாடு; 27ல் சித்துார் நாடு; 28ல் எடப்புளி நாடு; ஏப்., 1ல் தேவனுார் நாடு, 2ல் குண்டனி நாடு, 3ல் குண்டூர் நாடு; 4ல் பெரக்கரை நாடு, 8ல் சேலுார் நாடு; 9ல் திண்ணனுார் நாடு; 10ல் திருப்புளி நாடு; 11ல் வளப்பூர் நாடு; 15ல் வாழவந்தி நாடு கிராம ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடக்கிறது.
பதிவு செய்பவர்கள், 18 வயது நிரம்பியவர் களாகவும், 65 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.