/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அடிப்படை வசதி கேட்டுதாராபுரம் அருகே மறியல்
/
அடிப்படை வசதி கேட்டுதாராபுரம் அருகே மறியல்
ADDED : மார் 19, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அடிப்படை வசதி கேட்டுதாராபுரம் அருகே மறியல்
தாராபுரம்:தாராபுரத்தை அடுத்த பொட்டிக்காம்பாளையம், பாரதி நகர் பகுதி மக்கள், மயான வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் தாசார்பட்டி அருகே பொள்ளாச்சி சாலையில், நேற்று மதியம் சாலை மறியலில் ஈடுபட்டனர். தாராபுரம் டி.எஸ்.பி., சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தினர். மயான வசதி, குடிநீர் வசதி, இலவச வீட்டு மனை பட்டா வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை மக்கள் முன் வைத்தனர்.
இது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறவே, கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.