/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கட்டட மேஸ்திரியை கொன்ற இருவர் கைது
/
கட்டட மேஸ்திரியை கொன்ற இருவர் கைது
ADDED : மார் 19, 2025 01:44 AM
கட்டட மேஸ்திரியை கொன்ற இருவர் கைது
சென்னிமலை:சென்னிமலை, திருநகர் காலனியை சேர்ந்த கட்டட மேஸ்திரி கணேசன், 48; சென்னிமலை மலை அடிவாரத்தில் வாரச்சந்தையில் நேற்று முன்தினம் பிணமாக கிடந்தார்.
சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கணேசனிடம் கட்டட வேலை செய்து வந்த இருவர், மது போதையில் ஏற்பட்ட தகராறில், கல்லால் அடித்து கொன்ற தெரிந்தது.
இது தொடர்பாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், சிடுவம்பட்டி, பாய்பள்ளத்தை சேர்ந்த கண்ணுப்பையன், 53; நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், செம்மாண்டம்பட்டியை சேர்ந்த ஜெகன், 35, ஆகியோரை, சென்னிமலை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இருவரையும் பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.