/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இறைச்சி கடைக்காரர்களுக்குவட்டார வளர்ச்சி அலுவலர் அறிவுரை
/
இறைச்சி கடைக்காரர்களுக்குவட்டார வளர்ச்சி அலுவலர் அறிவுரை
இறைச்சி கடைக்காரர்களுக்குவட்டார வளர்ச்சி அலுவலர் அறிவுரை
இறைச்சி கடைக்காரர்களுக்குவட்டார வளர்ச்சி அலுவலர் அறிவுரை
ADDED : மார் 20, 2025 01:34 AM
இறைச்சி கடைக்காரர்களுக்குவட்டார வளர்ச்சி அலுவலர் அறிவுரை
சென்னிமலை:சென்னிமலை யூனியன், ஓட்டப்பாறை ஊராட்சி மற்றும் முகாசிப்பிடாரியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், இறைச்சி கடை நடத்தும் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்குவதற்கான ஆலோசனை கூட்டம், சென்னிமலை வட் டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாலமுரு கன் தலைமையில் நடந்தது.
ஓட்டப்பாறை ஊராட்சி செயலாளர் பழனிசாமி வரவேற்றார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் குமார், வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் ராமசாமி, முகாசிபிடாரியூர் ஊராட்சி செயலாளர் தங்கமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் பேசியதாவது: இறைச்சி கடை உரிமையாளர்கள் கழிவு இறைச்சி, மீன் கழிவுகளை யாருக்கும் தெரியாமல் ஊராட்சியின் ஒதுக்குப்புறமான இடங்களில் கொட்டுகிறீர்கள். இது தவறு. தெரு நாய்கள் இறைச்சி கழிவுகளை உட்கொள்வதால், அருகாமையில் உள்ள பண்ணைகளில் புகுந்து ஆடு, கோழிகளை கடித்து சேதப்படுத்தி வருகிறது. கடைகளில் சேகரமாகும் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு ஊராட்சி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்கும். பொது இடங்களில் இறைச்சி கழிவுகளை, கொட்டுவோர் மீது தமிழ்நாடு ஊராட்சி சட்டத்தின் படியும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் படியும், முதலில் உரிய அபராதம் விதிக்கப்படும். மீறும் நபர்கள் மீது கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு பேசினார்.