/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சங்கராப்பாளையம் பஞ்சாயத்துக்குநிரந்தர செயலர் நியமிக்க கோரிக்கை
/
சங்கராப்பாளையம் பஞ்சாயத்துக்குநிரந்தர செயலர் நியமிக்க கோரிக்கை
சங்கராப்பாளையம் பஞ்சாயத்துக்குநிரந்தர செயலர் நியமிக்க கோரிக்கை
சங்கராப்பாளையம் பஞ்சாயத்துக்குநிரந்தர செயலர் நியமிக்க கோரிக்கை
ADDED : மார் 22, 2025 01:15 AM
சங்கராப்பாளையம் பஞ்சாயத்துக்குநிரந்தர செயலர் நியமிக்க கோரிக்கை
அந்தியூர்:அந்தியூர் யூனியன் சங்கராப்பாளையம் பஞ்சாயத்தில், பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மூன்று மாதத்துக்கு முன் பஞ்., செயலர்கள் மாற்றப்பட்டனர். இதன்படி எண்ணமங்கலம் செயலர் மணிமுத்து, சங்கராப்பாளையத்துக்கு பொறுப்பேற்றார். இந்நிலையில் பர்கூர் பஞ்., செயல் பிரபாகரன், வரவு-செலவு கணக்கு பிரச்னையில், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். இதனால், ௨0 நாட்களுக்கு முன், மணிமுத்து பர்கூர் பஞ்.,க்கு மாற்றப்பட்டார். பச்சாம்பாளையம் செயலர் கேசவன் கூடுதல் பொறுப்பாக பார்த்து வருகிறார். அவர் வாரம் ஒருமுறை மட்டும் வருவதால், அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்குமா? என மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. கோடை காலம் துவங்கிவிட்டதால், குடிநீர் பிரச்னை உருவெடுக்கும். இந்த சமயத்தில் எந்த பஞ்சாயத்தை அவர் கவனிப்பார் என தெரியவில்லை. எனவே சங்கராப்பாளையத்துக்கு நிரந்தர செயலர் நியமிக்க மக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.