/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பேப்பர் கோன் விலையைஉயர்த்த உற்பத்தியாளர் முடிவு
/
பேப்பர் கோன் விலையைஉயர்த்த உற்பத்தியாளர் முடிவு
ADDED : மார் 28, 2025 01:04 AM
பேப்பர் கோன் விலையைஉயர்த்த உற்பத்தியாளர் முடிவு
ஈரோடு:தி இன்டஸ்ட்ரியல் பேப்பர் கோன்ஸ் அண்ட் டியூப்ஸ் மேனுபேக்சர்ஸ் அசோசியேசன் எனப்படும் பேப்பர்கோன் உற்பத்தியாளர் சங்க ஆலோசனை கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. தலைவர் இளங்கோ தலைமை வகித்தார். துணை தலைவர் சங்கரநாராயணன் வரவேற்றார். பேப்பர் கோன் மற்றும் டியூப்ஸ் விலையை 15 சதவீதம் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றினர்.
இதுகுறித்து சங்க செயலாளர் குப்புசாமி கூறியதாவது: ஈரோடு, நாமக்கல், சேலம், ராஜபாளையம், கோவை, தாரரபுரம் பகுதிகளில், 170 பேப்பர் கோன் மற்றும் பேப்பர் டியூப்ஸ் உற்பத்தி ஆலைகள் உள்ளன. இங்கு தினசரி, 15 லட்சம் கோன்கள் மற்றும் பேப்பர் டியூப்ஸ் தயாரிக்கப்படுகின்றன. தற்போது பேப்பர் கோன், பேப்பர் டியூப்ஸ் செய்வதற்கான கிராப்ட் காகிதத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பேப்பர் கோன் மற்றும் பேப்பர் டியூப் விலையை, 15 சதவீதம் உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.