/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மகன் வீட்டுக்கு வந்ததாயிடம் நகை பறிப்பு
/
மகன் வீட்டுக்கு வந்ததாயிடம் நகை பறிப்பு
ADDED : ஏப் 04, 2025 01:27 AM
மகன் வீட்டுக்கு வந்ததாயிடம் நகை பறிப்பு
மொடக்குறிச்சி:ஈரோடு அருகேயுள்ள லக்காபுரம் நகராட்சி நகரை சேர்ந்த முருகன் மனைவி இசக்கியம்மாள், 65; ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை. இவர்கள் சொந்த ஊர் திருநெல்வேலி. இவர்களின் மகன் நகராட்சி நகரில் வசிக்கிறார். மகன் வீட்டுக்கு இசக்கியம்மாள் வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு பேரனுடன் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் ஹெல்மெட் அணியாமல் வந்த இருவரில் ஒருவர், பைக்கில் இருந்து இறங்கி முகவரி கேட்பதுபோல் பேசி, அவர் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்கச்சங்கிலியை பறிக்க முற்பட்டான்.
இசக்கியம்மாள் சுதாரித்து செயினை இறுக பற்றிக் கொண்டதில், அரை பவுன் மாங்கல்யம் மட்டும் மர்ம நபரின் கைவசமானது. உடனடியாக இருவரும் பைக்கில் தப்பி விட்டனர். இசக்கியம்மாள் புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார், பைக் கொள்ளையரை தேடி
வருகின்றனர்.