/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மீண்டும் மஞ்சள் ஏலம்விலை உயர்வால் மகிழ்ச்சி
/
மீண்டும் மஞ்சள் ஏலம்விலை உயர்வால் மகிழ்ச்சி
ADDED : ஏப் 08, 2025 02:04 AM
மீண்டும் மஞ்சள் ஏலம்விலை உயர்வால் மகிழ்ச்சி
ஈரோடு:ஈரோட்டில் ஒன்பது 9 நாட்களுக்கு பின் நேற்று நடந்த ஏலத்தில் மஞ்சள் குவிண்டாலுக்கு, 900 ரூபாய் விலை உயர்ந்தது.
ஈரோடு பகுதியில் ஈரோடு, பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம், ஈரோடு, கோபி சொசைட்டியில் திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏலம் நடக்கிறது. ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவால் கடந்த மாதம், 29 முதல் நேற்று முன்தினம் வரை, 9 நாட்கள் ஏலத்துக்கு விடுமுறை விடுக்கப்பட்டது. நேற்று மீண்டும் ஏலம் தொடங்கியது. இதில் ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டால், 6,899 - 14,890 ரூபாய், கிழங்கு, 5,599 - 13,699 ரூபாய்க்கு ஏலம் போனது.
விரலி குறைந்தபட்சம், 9,699 ரூபாய், அதிகபட்சம், 15,796 ரூபாய், கிழங்கு மஞ்சள் குறைந்த பட்சம், 8,099 ரூபாய், அதிகபட்சம், 14,259 ரூபாய்க்கும் விலை போனது. நான்கு மார்க்கெட்டிலும் சேர்த்து, 8,299 மூட்டை வரத்தாகி, 4,903 மூட்டை விற்பனையானது. கடந்த, 28க்கு பின் நேற்றைய ஏலத்தில், 900 ரூபாய் கூடுதல் விலைக்கு விற்பனையானது.

