/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஷோபாவுக்குள் புகுந்த பாம்புதீ வைத்ததால் வெளியேறியது
/
ஷோபாவுக்குள் புகுந்த பாம்புதீ வைத்ததால் வெளியேறியது
ஷோபாவுக்குள் புகுந்த பாம்புதீ வைத்ததால் வெளியேறியது
ஷோபாவுக்குள் புகுந்த பாம்புதீ வைத்ததால் வெளியேறியது
ADDED : ஏப் 09, 2025 01:38 AM
ஷோபாவுக்குள் புகுந்த பாம்புதீ வைத்ததால் வெளியேறியது
சென்னிமலை:சென்னிமலை காட்டூரில் வசிப்பவர் மூர்த்தி. போட்டோகிராபரான இவர் ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இவரது வீட்டின் அருகே வசிப்பவர் மரத்தை நேற்று வெட்டினார். அதில் இருந்த கொம்பேறி மூக்கன் பாம்பு வெளியேறி, மூர்த்தி வீட்டுக்குள் நுழைந்து, சோபாவுக்குள் புகுந்து கொண்டது.
எவ்வளவோ முயன்றும் பாம்பு வெளியே வரவில்லை. இதனால் அச்ச மடைந்த குடும்பத்தினர் ஷோபாவை வெளியே எடுத்து வந்து தீ வைத்து கொளுத்தினர். தீ கொழுந்து விட்டு எரிந்தபோது வெப்பம் தாங்க முடியாமல், ஷோபாவை விட்டு பாம்பு வேகமாக வெளியேறியது.
இதைக்கண்ட மூர்த்தி உள்ளிட்ட குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அதேசமயம் ஆசையாக பயன்படுத்திய ஷோபாவை எரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் வருத்தம் அடைந்தனர்.