/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன்கோவிலில் பொங்கல் விழா
/
ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன்கோவிலில் பொங்கல் விழா
ADDED : ஏப் 09, 2025 01:39 AM
ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன்கோவிலில் பொங்கல் விழா
சென்னிமலை:சென்னிமலை அருகே மணிமலையில் ஸ்ரீபண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் பொங்கல் விழா கடந்த, 1ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் பக்தர்கள் கொடுமுடி சென்று காவிரி தீர்த்தம் எடுத்து வந்தனர். அன்றிரவு தீர்த்த குடங்களுடன் கோவிலுக்கு
ஊர்வலமாக சென்றனர்.பிறகு சுவாமிக்கு தீர்த்த அபிஷேகத்தை தொடர்ந்து அலங்காரம் செய்து பூஜை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலையில் பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி கும்பம் எடுத்தும் கோவிலுக்கு சென்றனர். மணிமலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

