/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
செல்லாண்டி அம்மன் கோவில் குண்டம் விழா
/
செல்லாண்டி அம்மன் கோவில் குண்டம் விழா
ADDED : ஏப் 10, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செல்லாண்டி அம்மன் கோவில் குண்டம் விழா
பவானி:அம்மாபேட்டை அருகே நெரிஞ்சிப்பேட்டையில், செல்லாண்டி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த, 25ல், பூச்சாட்டுதலுடன் பண்டிகை துவங்கி, கம்பம் நடப்பட்டது. முக்கிய நிகழ்வான நேற்று காலை, கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த, குண்டத்தில் நெரிஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் மற்றும் பக்தர்கள் அலகு குத்தி பயபக்தியுடன் வந்து குண்டம் இறங்கினர். பின், பொங்கல் வைத்து வழிபட்டனர்.
இரவு வாணவேடிக்கைகளுடன் சுவாமி திருவீதி உலா நடந்தது. நாளை கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் பண்டிகை நிறைவடைகிறது.

