/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்றவர் கைது
/
சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்றவர் கைது
ADDED : ஏப் 10, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்றவர் கைது
ஈரோடு:ஈரோடு வீரப்பம்பாளையம் பிரிவு, டாஸ்மாக் கடை அருகே நேற்று முன்தினம் சந்தேகத்துக்கு இடமான வகையில், நின்றிருந்த நபரை வீரப்பன்சத்திரம் எஸ்.ஐ., கணேசன் பிடித்து விசாரித்தார். அப்போது அந்த நபரிடம், 15 பிராந்தி பாட்டில்கள் அதிக விலைக்கு விற்க வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் பிடிபட்ட நபர், அதே பகுதியை சேர்ந்த சின்னையன், 45, என்பது தெரியவந்தது. மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

