/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நகராட்சியுடன் பஞ்., இணைப்புமுயற்சியை கைவிட்டதற்கு நன்றி
/
நகராட்சியுடன் பஞ்., இணைப்புமுயற்சியை கைவிட்டதற்கு நன்றி
நகராட்சியுடன் பஞ்., இணைப்புமுயற்சியை கைவிட்டதற்கு நன்றி
நகராட்சியுடன் பஞ்., இணைப்புமுயற்சியை கைவிட்டதற்கு நன்றி
ADDED : ஏப் 11, 2025 01:31 AM
நகராட்சியுடன் பஞ்., இணைப்புமுயற்சியை கைவிட்டதற்கு நன்றி
ஈரோடு:கோபி நகராட்சியுடன் சில பஞ்.,களை இணைக்கும் அறிவிப்பை கைவிட்ட அமைச்சர், எம்.எல்.ஏ.,வுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி கொடிவேரி அணை - பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபி.தளபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: பா.வெள்ளாளபாளையம், குள்ளம்பாளையம், பாரியூர், மொடச்சூர் பஞ்.,களை கோபி நகராட்சியுடன் இணைப்பதாக அரசு
அறிவித்தது.இவ்வாறு நடந்தால் இப்பகுதிகளில் வாழும் விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், நிலம் வைத்திருப்போர், வேளாண் தொழில் செய்வோர் பாதிக்கப்படுவர். இந்த முடிவை கைவிடக்கோரி பஞ்.,களில் இருமுறை தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பினோம். கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையனையும் சந்தித்து, சட்டசபையில் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க கேட்டு கொண்டோம்.
சட்டசபையில் எம்.எல்.ஏ., செங்கோட்டையன் விளக்கியதும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு தனது பதிலில், 'மேற்படி நான்கு பஞ்.,களையும் நகராட்சியுடன் இணைக்கும் முடிவை அரசு கைவிட்டுள்ளது,' என்று அறிவித்தார். இம்முயற்சிக்காக எம்.எல்.ஏ., செங்கோட்டையன், தமிழக அரசு, அமைச்சர் நேரு உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.