/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அத்திக்கடவு திட்டத்தில் குறைகேட்பு கூட்டம் அவசியம்
/
அத்திக்கடவு திட்டத்தில் குறைகேட்பு கூட்டம் அவசியம்
அத்திக்கடவு திட்டத்தில் குறைகேட்பு கூட்டம் அவசியம்
அத்திக்கடவு திட்டத்தில் குறைகேட்பு கூட்டம் அவசியம்
ADDED : ஜூன் 20, 2025 01:29 AM
திருப்பூர், 'அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணி தொடர்பாக, மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும்' என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி, 1,916 கோடி ரூபாய் செலவில் அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இத்திட்டத்தில் பொருத்தப்பட்டுள்ள குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு மற்றும் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் நீர் செறிவூட்டும் பணியில் தடங்கல் ஏற்படுவதாக விவசாயிகள் கூறி வருகின்றனர். இதனால், ஒவ்ரு நீரேற்று நிலையங்களிலும், முழுமையாக மோட்டார்களை இயக்க முடிவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: இத்திட்டத்தின் கீழ் குளம் குட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி சென்சார் கருவிகள் வாயிலாக, உரிய முறையில் நீர் செறிவூட்டப்பட்டிருக்கிறதா என்பதையும் அதிகாரிகள் அவ்வப்போது உறுதிப்படுத்த வேண்டும். மேலும், அரசின் சிறப்பு நீர் மேலாண்மை திட்டம் என்ற அடிப்படையில், மாதம் ஒரு முறை கலெக்டர் தலைமையில், இத்திட்டம் தொடர்பான குறைகேட்பு கூட்டம் நடத்தி, விவசாயிகள் மற்றும் அத்திக்கடவு ஆர்வலர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும். இதன் வாயிலாக திட்டத்தில் தென்படும் குறைகளை களையவும், திட்டத்தின் பலன் அனைத்து இடங்களுக்கும் சென்று சேர்வதை உறுதிப்படுத்தவும் முடியும். இவ்வாறு கூறினர்.