/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பழங்குடியினராக அறிவிக்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு
/
பழங்குடியினராக அறிவிக்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு
பழங்குடியினராக அறிவிக்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு
பழங்குடியினராக அறிவிக்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு
ADDED : அக் 19, 2025 02:20 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பர்கூர், கடம்பூர் மலைப்பகுதி மலைவாழ் மலையாளிகள், மத்திய மற்றும் மாநில அரசுகள், தங்களை பட்டியல் பழங்குடியினர் இனத்தில் (எஸ்.டி.,) சேர்த்து சமூக சான்றிதழ்களை வழங்க வேண்டும். இல்லையேல் வரும் சட்டசபை தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர். இதுபற்றி தமிழ்நாடு பட்டியல் பழங்குடி மலையாளி பேரவை மாவட்ட செயலர் முருகன் கூறியது:
தமிழகத்தில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் வாழும் மலைவாழ் மலையாளி மக்கள் தொகை, 3 லட்சத்து, 57,980. இதில், 31,200 பேர் ஈரோடு மாவட்டம் பர்கூர், கடம்பூர் மலைப்பகுதிகளில் வசிக்கின்றனர். இதில், 1976ல் அரசு உத்தரவுப்படி ராணிப்பேட்டை, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் வசிக்கும் மலைவாழ் மலையாளிகள், பட்டியல் பழங்குடியினரில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருப்பினும் பர்கூர், கடம்பூர் மலைப்பகுதியில் வசிக்கும் எங்களை போன்றோர், கேரள மலையாளிகளாக கருதி, பட்டியல் பழங்குடியினர் சமூகத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, 50 ஆண்டுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வருகிறோம். பழங்குடியினர் சமூக சான்றிதழ் பெற முடியால் கல்வி, வேலைவாய்ப்பு, அரசு சலுகைகள் பெற முடியாமல் மக்கள் பாதிக்கின்றனர்.எங்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்கும் தீர்மானத்தை, தமிழக சட்டசபையில் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். மத்திய அரசும் உரிய சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். அல்லது எங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைத்து, வர உள்ள சட்டசபை தேர்தலை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு கூறினார்.